கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து நடத்தப்படும் “வளம்” பயிற்சி, இன்று சமுதாயத்தில் அதிகரித்து வரும் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் மனநல சிக்கல்களுக்கு நீரந்தர தீர்வை வழங்கும் ஒரு நவீன முயற்சியாகும். போதைப்பழக்கம் காரணமாக ஏற்படும் குடும்ப மற்றும் மனநல பாதிப்புகளுக்கு மறுவாழ்வு ஆலோசனைகள், தியானம் மற்றும் மன அழுத்த மேலாண்மை வழிகாட்டுதலின் மூலம் தீர்வு காணப்படுகிறது,
கணவன் மனைவிக்குள் ஏற்படும் புரிதலற்ற பிரச்சினைகளுக்கு உளநல நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன, மனிதவாழ்க்கைக்கு குடும்ப அமைப்பின் மேன்மையும், பாதுகாப்பும் அவசியம் என்பது அறிவுறுத்தப்பட்டு அற்ப காரணங்களுக்காக குடும்ப அமைப்பு சிதைக்கப்படுவது தடுக்கப்படுகிறது,
பெண்குழந்தைகள் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது,
Valam – Because Mental Health Matters!