பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு (Postpartum Care)

"புதிய உயிரின் பிறப்புக்கு பின் தாயின் நலம் மிக முக்கியம்”

இந்த வகுப்பின் முக்கியத்துவம்

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் தாயின் உடல் மற்றும் மனநிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியமான கட்டமாகும்.

எங்கள் Postpartum Care Class-ல், தாய்மார்களுக்கு தேவையான அறிவு மற்றும் நடைமுறை ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன:

  • உடல் & மனநலம் பராமரிப்பு – உடல் மீட்சி, சத்தான உணவு, போதுமான ஓய்வு
  • சிக்கல் தடுப்பு – பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு, தொற்று, மனச்சோர்வு குறித்து விழிப்புணர்வு
  • குழந்தை நலன் – தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள், குழந்தை பராமரிப்பு அறிவு
  • குடும்ப ஆதரவு – குடும்பத்தினர் தாய்க்கு அளிக்க வேண்டிய உதவி
  • தன்னம்பிக்கை – தாய்மையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மன உறுதி
ஏன் இந்த வகுப்பு அவசியம்?
  • அறிவின் பற்றாக்குறை – பலருக்கும் postpartum care பற்றிய தெளிவு இல்லை
  • தனிக்குடும்பம் அதிகரிப்பு – அனுபவம் பகிரும் பெரியோர்கள் குறைவு
  • சுகாதார சேவை அணுகல் குறைவு – அடிப்படை பராமரிப்பு அறிவு அவசியம்
  • சமூக அழுத்தம் – நவீன வாழ்க்கை முறை தாய்மார்களுக்கு அழுத்தம் தருகிறது

சுருக்கமாக: இந்த வகுப்பு, தாய்மார்கள் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக, குழந்தையை வளர்க்க முழுமையாகத் தயாராக இருக்க உதவுகிறது.

தாய்ப்பால் ஊட்டும் வகுப்புகள் (Breastfeeding Classes)

தாய்ப்பால் – உயிரின் முதல் ஊட்டச்சத்து

Breast Milk is Best Milk (Liquid Gold)

நோக்கம்:
  • தாய்ப்பாலின் சத்து மற்றும் முக்கியத்துவம்
  • குழந்தையை சரியாக பால் குடிக்கச் செய்வது (Position & Latch)
  • பொதுவான சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
  • தாயின் உணவு & மனநிலை பராமரிப்பு
வகுப்பு விவரம்
  • கால அளவு: 4 மணி நேரம் (ஒரு நாளுக்கு 1 மணி நேரம்)
  • இடம்: மருத்துவமனை / PHC / ஆரோக்கிய மையம்
  • முறைகள்: விளக்கம் + செய்முறை காட்சி + கேள்வி-பதில்
பிரதான தலைப்புகள்:
  • தாய்ப்பால் என்ன? ஏன் முக்கியம்?
  • Colostrum (சீம்பால்) முக்கியத்துவம்
  • WHO & UNICEF பரிந்துரை – 6 மாதம் முழு தாய்ப்பால்
  • பால் கொடுக்கும் சரியான நிலை & பிடிப்பு (Live Demo)
  • பால் கட்டுதல், பால் அடைப்பு, பால் குறைவு – தீர்வுகள்
  • பால் சேமிப்பு வழிமுறைகள்
  • தாயின் உணவு, மனஅழுத்த குறைக்கும் யோகா
தாய்ப்பால் தானம் (Human Milk Donation)
  • தாய்ப்பால் பெற முடியாத குழந்தைகளுக்கு உயிர்காக்கும் பணி
  • WHO, UNICEF பரிந்துரைக்கும் நடைமுறை
  • Milk Bank மூலம் சேகரிப்பு, பரிசோதனை, பாஸ்டுரைஸ், விநியோகம்
தகுதி:
  • ஆரோக்கியமான தாய்மார்கள்
  • தொற்று நோய்கள் இல்லாதவர்கள்
உலக தாய்ப்பால் வாரம் (WBW)

ஆகஸ்ட் 1–7

நோக்கம்: தாய்ப்பால் ஊட்டும் விழிப்புணர்வு

முக்கிய செய்தி:
  • 6 மாதம் முழு தாய்ப்பால்
  • தாய்ப்பால் + சத்தான திண்ண உணவு 2 வயது வரை
  • தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Online

1st week and 2nd week Training

Duration: 6 days

Time: 10.30 AM to 12.30 PM

Offline

Only Saturdays and Sundays

Duration: First 3 weeks

Time: 10.30 AM to 12.30 PM

Contact Us Today!

Garbhadhaarini – Because Every Mother Deserves Care, Knowledge, and a Safe Delivery!