அன்பின் வெளிப்பாடு, புது வாழ்வின் தொடக்கம்
கஜானந்தா அறக்கட்டளை, சமூக நலனில் அக்கறையுடன், புது வாழ்க்கை தொடங்கும் மணமக்களுக்கு ஆதரவளிக்கும் உன்னத பணியில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் சகோதர நிறுவனமான பெரம்பலூர் தேவராயன் கோல்ட் அண்ட் டைமன்ட் உடன் இணைந்து, அருகிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருமண சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மணமக்களை மனதார வாழ்த்தி, அவர்களுக்கு உடைகள் பரிசாக வழங்கி வருகிறோம்.
இத்திட்டத்தின் மூலம், இதுவரை நூற்றுக்கணக்கான மணமக்கள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு திருமணமும் ஒரு புதிய கனவின் தொடக்கம்; அந்த கனவை அழகாக்க, மணமக்களுக்கு உயர்ந்த தரமான உடைகளை பரிசாக வழங்கி, அவர்களின் புது வாழ்வை மகிழ்ச்சியுடன் தொடங்க உதவுகிறோம்.
எங்கள் திட்டத்தில் பயனடைய விரும்பும் மணமக்கள்( பெரம்பலூர் நகரில் மட்டும்) அல்லது திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு உடைகள் மற்றும் ஆதரவு வழங்கப்படும்.
கஜானந்தா அறக்கட்டளையின் தாய்வீட்டு சீதனத் திட்டம், மணமக்களின் மகிழ்ச்சியையும் புது வாழ்வின் அழகையும் கொண்டாடுவதற்கு உங்களையும் அழைக்கிறது. இந்த உன்னத பயணத்தில் நீங்களும் பங்கேற்க, எங்களுடன் இணையுங்கள்!
Thaiveetu Seethanam – A Gift of Love, Blessings & Tradition!