உழவர் சேவை மையம்

விவசாயிகளுக்கும் பழங்குடியினருக்கும் ஒரு உறுதுணை

உழவர் சேவை மையம் திட்டத்தின் மூலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மாணவர்களுக்கும், விவசாய சமூகத்தினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றோம்.

செயல்பாடுகள்
  • விவசாய நிலங்களில் விலங்குகளின் இடையூறுகளைக் கண்காணிக்க உதவும் வகையில், உயர்தர டார்ச் லைட்களை விவசாயிகளுக்கு வழங்குதல் .
  • விவசாயப் பணிகளை எளிதாக்க, அத்தியாவசியமான விவசாயக் கருவிகளை வழங்கி, உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் .
  • மழைக்காலங்களில் தானியங்கள் மற்றும் விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க தார் பாய்களை விநியோகிக்கிறோம்
  • பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்குதல்
பங்கேற்பது எப்படி?

எங்கள் உழவர் சேவை மையத்தின் ஆதரவைப் பெற விரும்பும் விவசாயிகள் அல்லது பழங்குடியினர் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.

Contact Us Today!

Uzhavar Seva – Nourishing Nature, Empowering Farmers!