அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துகள்..!! நமது கஜானந்தா அறக்கட்டளை சமூக மாற்றத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் சேவைகளால் சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க அரும்பாடு பட்டு வருகிறது
தமிழ்நாடு முழுவதும் எங்களது நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பல சமூக நலன்களை சமுதாயத்திற்கு செய்து வருகிறோம், கோயமுத்தூரில் நிறுவப்பட்டுள்ள நமது கஜானந்தா அறக்கட்டளை, சமூக நலன், ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்துறைகளில் பல்துறை சேவைகளை வழங்கி வருகிறது. எங்களின் கொள்கை "கருவிலேயே திருவுடைய குழந்தைகளை உருவாக்குதல்" என்பதாகும்.
எங்கள் முக்கிய செயல்பாடுகளில் கர்ப்பதாரிணி (Pregnancy Care Classes) முக்கிய இடம்பிடிக்கிறது. இது பாரம்பரிய ஞானத்தையும் நவீன அறிவியலையும் இணைத்து தாய்மார்களுக்கு உடல், மனம் மற்றும் ஆன்மாவின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏறத்தாழ 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கியிருக்கிறோம்,
மேலும் அனைத்து சமூக மணமக்களுக்காக திருமண இணைவு ( Matrimony ) சேவைகளை சுயம் வரம் ( Suyamvaram App )செயலி வழியாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் மூலம். எங்கள் அறக்கட்டளை 5,000க்கும் மேற்பட்ட திருமணங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது .
சீதனம் ( Pre Marital Course ) தலைப்பில் திருமணத்திற்கு முன் நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி, இளைய தலைமுறையினருக்கு Fit for Future எனும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி , குடும்ப ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தும் (வளம்)ஆலோசனைகள் , குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாம், ஆலயங்களைத் தூய்மைப்படுத்தும் உழவாரப்பணி , வேளாண்மை வளர்ச்சி உழவர் சேவை மையம் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறோம்.
மேலும் இலட்சக்கணக்கான பயனாளிகளுக்கு தொடர் சேவைகளை செய்தலே அறம் எனக்கொண்டு தொடக்கம் முதல் இன்று வரை அயராது நானும் எமது குழுவும் உங்களுடன் இணைந்து, உங்களுக்கு ஆதரவளிக்கவும், வழிகாட்டவும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். எங்களுடன் இணையுங்கள், நமது உன்னதமான சேவை பயணத்தை ஒரு ஆழமான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றுவோம்.
அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த நல் வாழ்க்கையை வாழ்வோம்..!!
நிறுவனர்,
கஜானந்தா அறக்கட்டளை
கோயமுத்தூர் ,
இந்தியா
empowers individuals and communities by providing transformative support and resources for personal growth and well-being.
Years of experience
Happy Beneficiaries
Service Branches
Social Work Professionals
Key Activities: Yoga camps, health check-ups, education aid for labour families
Key Activities: Mental wellness for journalists, magazine articles, awareness posts
Key Activities: Yoga, medical camps, mental health and educational support for miners
Key Activities: Tech skill training for students, school kit distribution
Key Activities: Stress relief yoga, health check-ups, Garbhadhaarini training
Key Activities: Meditation, support to monasteries, tree plantation